சனி, 26 ஏப்ரல், 2014

கனவு

                             கனவு

குழந்தையாய் தவழுகையில்
தொட்டிலில் உறங்குகையில்
வந்த கனவு என்னவென்று
நினைவிலில்லை இன்று !

ஆனால் இன்று குழந்தைகள்
உறக்கத்தில் சிரிக்கையில்
கனவில் கண்ணன் விளையாடுகின்றான்
எனச் சொன்னார் தாத்தா பாட்டி !

சிறுபருவத்து கனவில்
விளையாட்டும் பொம்மையும்
நண்பனும் கருப்பூரக் கிணறும்
மகிழ்ச்சியும் பயமும் கலவையாய் ! 

விடலைப் பருவக் கனவில்
ஆசிரியர் ஒரு நாள் பயமுறுத்த
தாத்தா கம்புடன் அலறவைக்க
வகுப்புத் தோழி சம்பந்தமேயில்லாமல் !

கல்லூரிக்காலம் கனவில்லாமல்
காரணம் பகல்பொழுதும் கனவாய்
நம் படிப்பு எப்படி முடியுமோ
நாளைய வாழ்வு எப்படி விடியுமோ என !

பின்னர் கனவென்பது என்னவென்று
தெரியாமல் காணாமலே போனது
ஆசைகள் லட்சியங்கள் என்றும்
கனவென்றும் கற்பிக்கப்பட்டது !

கனவினை அடைவதே உயர்ந்தது
என அதன் பின்னே ஓடி ஓடி
தூக்கத்தை தொலைத்த பின்பு

கனவென்பது இனி ஏது?